சினிமா

மகன் சூர்யா செய்த செயலால் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி..

Published

on

மகன் சூர்யா செய்த செயலால் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி..

நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் நாளை ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படத்தின் பிரமோஷன் வேலை நடந்து வந்துள்ளது.சமீபத்தில் நடந்த பீனிக்ஸ் பட விழாக்களில் சூர்யா சேதுபதி, நடந்து கொண்ட சில செயல்கள் விமர்சனத்திற்குள்ளனது. ஓவர் ஆட்டிட்டியூட் காமிப்பதாக கூறி சில வீடியோக்கள் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியானது.அந்த வீடியோக்களை வெளியிட்டவர்களில் சிலரை, சூர்யா தரப்பில் இருந்து அழைத்து வீடியோவை நீக்கச்சொல்லி மிரட்டியதாக சிலர் புகாரளித்தனர். இந்த விவகாரம் சரிச்சையான நிலையில் இதுதொடர்பாக நேற்று, நடிகரும் சூர்யாவின் தந்தையுமான விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.அதில், தம்பிமாருங்க தெரியாமல் பண்ணிருப்பாங்க, எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து மிரட்டல் நடந்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.அறிமுகமான முதல் படத்திலேயே அப்பாவை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டாரே சூர்யா என்ற கருத்துக்களும் தற்போது எழுந்து வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version