இலங்கை

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; பொலிஸார் சுற்றிவளைப்பு

Published

on

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; பொலிஸார் சுற்றிவளைப்பு

  கொழும்பில் கல்கிஸ்ஸை பெலக்கடை சந்திக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெண் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (02) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஆணும் மாத்தறை தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version