இலங்கை

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது

Published

on

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (3) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்திலும் ஐந்தாம் தரத்திலும் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு மத்தியில் சிறு சிறுவர் முரண்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதை அவதானித்துக் கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் தந்தை ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனுக்கு கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவன் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துடன், தாக்கிய நபரை வாழைச்சேனை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version