பொழுதுபோக்கு

முதல் காதலி நினைவு; கண்கள் அவளை தேடுதே… பிரபல நடிகரிடம் கதறி அழுத ரஜினிகாந்த்!

Published

on

முதல் காதலி நினைவு; கண்கள் அவளை தேடுதே… பிரபல நடிகரிடம் கதறி அழுத ரஜினிகாந்த்!

திரைப்படங்களில் பல கதாநாயகிகளுடன் காதல் செய்திருந்தாலும், நடிகர் ரஜினிகாந்துக்கு நிஜத்தில் ஒரு அழகான காதல் கதை இருந்துள்ளது. இந்த கதை பாட்ஷா படத்தில் அவருடன் நடித்த நடிகர் தேவன் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். 1975-ம் ஆண்டு வெளியான கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். குறிப்பாக ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின்னாளில் ஹீரோவாக உயர்ந்த ரஜினிகாந்த், தென்னிந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருகிறார்.மேலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இவர் 70-வயதை கடந்த பின்னும் இப்போதும் ஹீரோவாக நடிக்கிறார் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் அந்த நாளை திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம். பேனர் வைப்பது, படம் பார்க்க கூட்டமாக செல்வது, ரசிகர்கள் கூட்டத்திற்கு இடையில் முண்டியத்துக்கொண்டு டிக்கெட் வாங்குவது என பல செயல்களில் ஈடுபடுவார்கள். ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகருக்காக ரசகர்கள் இதை செய்வதை அவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும் பார்த்திருப்போம்.அதேபோல் திரைப்படங்களில் பல நடிகைகளுடன் காதலில் ஈடுபட்டு டூயட் பாடியுள்ள் ரஜினிகாந்துக்கு ரியல் வாழ்க்கையில் முதல் காதல் இருந்துள்ளது. பாட்ஷா படத்தின் போது இந்த காதல்கதையை சக நடிகரிடம் ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டுள்ளார். ரஜினிகாந்த் திரை வாழ்க்கையில் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும் பாட்ஷா படத்தில் நக்மாவின் அப்பா கேரக்டரில் நடித்தவர் பிரபல மலையாள நடிகர் தேவன். இந்த படத்திற்கு முன்பாக விஜயகாந்தின் ஹானஸ்ட்ராஜ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.பாட்ஷா படத்தில் நடிக்க தேவன் வந்தபோது, உங்கள் ஹானஸ்ட்ராஜ் படம் பார்த்தேன். சூப்பரா நடிச்சிருந்தீங்க. ஆச்சியை நீங்கள் கொல்ல வரும் காட்சிகள் எனக்கே பயமாக இருந்தது என்று கூறிய ரஜினிகாந்த், அவரை இரவு தன்னுடன் சாப்பிடுமாறு கூறயுள்ளார். அதன்படி இருவரும் இரவு சாப்பிடும்போது ரஜினிகாந்த் தேவனிடம் உங்களுக்கு முதல் காதல் இருக்கிறதா என்று கேட்க, தேவன் தனது முதல் காதல் குறித்து கூறியுள்ளார். இதை கேட்ட ரஜினிகாந்த் இப்போவும் உங்களுக்கு ஃபீலிங் இருக்கும்ல என்று கேட்டுள்ளார். அதன்பிறகு தேவன், உங்களுக்கு முதல் காதல் இருக்கா சார் என்று ரஜினிகாந்திடம் கேட்டுள்ளார்.இதை கேட்ட ரஜினிகாந்த் இருக்கு தேவன் சார்,என்று கதையை சொல்ல தொடங்கிய ரஜினிகாந்த் இறுதிக்கட்டத்தை நெருக்கும்போது கண்ணீர்விட்டு அழுதுள்ளார். நீ உலகம் அறிந்த நடிகனாக வருவ, உலகமே உன்னை பாராட்டும். போய் அதை பார் என்று என்னை வாழ்த்தி அனுப்பினாள். இப்போது நான் வளர்ந்துவிட்டேன். காஷ்மீர் இமயமலை போகிறேன், ஹைதராபாத், பெங்களூர், கர்நாடகா சிவாஜி நகர் என எல்லா இடங்களுக்கும் செல்கிறேன். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. என் கண்கள் அவளை தேடுகிறது என்று கூறியுள்ளார்.இதை சொல்லிக்கொண்டே நடிகர் ரஜினிகாந்த் கண்ணீர்விட்டு அழுததாகவும் அந்த காதலில் இருந்து அவர் மீண்டு வரவில்லை என்றும் நடிகர் தேவன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version