பொழுதுபோக்கு

முதல் நாள் முதல் காட்சி; டிக்கெட் எடுக்க திணறிய ரஜினிகாந்த்: எந்த நடிகரின் படத்துக்கு தெரியுமா?

Published

on

முதல் நாள் முதல் காட்சி; டிக்கெட் எடுக்க திணறிய ரஜினிகாந்த்: எந்த நடிகரின் படத்துக்கு தெரியுமா?

தென்னிந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் என்றால், அது ரஜினிகாந்த் தான். இவரது படங்கள் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம். அதேபோல் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் எடுக்க, முண்டியத்துக்கொண்டு ஓடுவார்கள். இப்படி பல பெருமைகள் இருந்தாலும், ஒரு நடிகரின் படத்தை பார்க்க ரஜினிகாந்த் முதல் நாள் முதல் ஷோ டிக்கெட்டை முண்டியத்துக்கொண்டு வாங்கி படம் பார்த்துள்ளார். அது யாருடைய படம் என்ன படம் என்பதை பார்ப்போமா?தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். 1975-ம் ஆண்டு வெளியான கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். குறிப்பாக ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பின்னாளில் ஹீரோவாக உயர்ந்த ரஜினிகாந்த், தென்னிந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருகிறார். மேலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இவர் 70-வயதை கடந்த பின்னும் இப்போதும் ஹீரோவாக நடிக்கிறார்ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் அந்த நாளை திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம். பேனர் வைப்பது, படம் பார்க்க கூட்டமாக செல்வது, ரசிகர்கள் கூட்டத்திற்கு இடையில் முண்டியத்துக்கொண்டு டிக்கெட் வாங்குவது என பல செயல்களில் ஈடுபடுவார்கள். ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகருக்காக ரசகர்கள் இதை செய்வதை அவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும் பார்த்திருப்போம். ஆனால் ரஜினிகாந்தே ஒரு நடிகரின் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க டிக்கெட் எடுத்த சம்பவமும் நடந்துள்ளது.பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் – கவுண்டமணி இருவரும் பிரபு நடித்த சின்ன தம்பி படத்தை பார்க்க முதல் 2 டிக்கெட்டுகளை பெற வேண்டும் என்பதற்காக, கூட்டத்திற்குள் புகுந்து டிக்கெட் எடுப்பார்கள். டிக்கெட் எடுத்துக்கொண்டு வெளியில் வரும்போது சட்டை நனைத்து கண்ணாடி உடைந்து அலங்கோலமாக இருப்பார்கள். ஆனாலும் டிக்கெட் எடுத்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த் கவுண்டமணி முகத்தில் வெளிப்படுத்தி இருப்பார்கள். இந்த மாதிரி ஒரு சம்பவம் ரஜினிகாந்த் ரியல் வாழ்க்கையில் நடந்துள்ளது.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரஜினிகாந்த் அம்மாநில சூப்பர் ஸ்டார் நடிகராக இருந்த ராஜ்குமார் படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அப்படி ஒருநாள் ராஜ்குமார் படம் வெளியானபோது கூட்டத்திற்குள் புகுந்து முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் வாங்கி வந்துள்ளார். இதை கவனித்த ரஜினிகாந்தின் தமிழ் நண்பர் ஒருவர், ராஜ்குமார் படத்தில் டிக்கெட் எடுத்துட்ட நம்ம வாத்தியார் (எம்.ஜி.ஆர்) படத்தில் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் எடுத்துவிடு பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.இதை ஒரு சவாலாக எடுத்தக்கொண்ட ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான தாய் மேல் ஆணை என்ற படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்குவதற்காக வரிசையில் முண்டியத்துக்கொண்டு ஓடி வாங்கியுள்ளார். காலை 4 மணிக்கு சென்று அந்த டிக்கெட் வாங்கியது மறக்க முடியாத அனுபவம். இருப்பதே 40 டிக்கெட் தான். ஆனால் 200 பெருக்கு மேல் இருந்தார்கள். அப்போது இந்த டிக்கெட் எடுத்தது என்னால் மறக்கவே முடியாத என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version