பொழுதுபோக்கு
மௌனராகம், ரோஜா நான் நடிக்க வேண்டிய படம்; சிலர் பேச்சை கேட்டு விட்டுட்டேன்: நடிகர் ஆனந்த் வருத்தம்!
மௌனராகம், ரோஜா நான் நடிக்க வேண்டிய படம்; சிலர் பேச்சை கேட்டு விட்டுட்டேன்: நடிகர் ஆனந்த் வருத்தம்!
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான டூயட் படத்தில் நான்தான் ஹீரோ. ஆனால் சம்பள விஷயத்தில் பைத்தியக்காரனத்தனமாக நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதை நினைத்து இன்னும் வருத்தமாக இருக்கிறது என்று நடிகர் ஆனந்த் கூறியுள்ளார்.1987-ம் ஆண்டு வெளியான வண்ண கனவுகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்த். தொடர்ந்து, கமல்ஹாசனின் சத்யா படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்த இவர், பூந்தோட்ட காவல்காரன் படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். சத்யா படம் போலவே இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு பிறகு கமல் ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்திருந்தார்.குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில், அஞ்சலி, திருடா திருடா ஆகிய படங்களில் நடித்திருந்த ஆனந்த், மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்திருந்தார், சரத்குமாருடன் ஊர் மரியாதை, சிவாஜியுடன் முதல் குரல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த ஆனந்த், வில்லன் குணச்சித்திரம் என பல கேரக்டரில் நடித்து தன்னை நிரூபித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தில் நடித்திருந்த ஆனந்த், சமீபத்தில் தெலங்கில் வெளியான அர்ஜூன் சன் ஆப் வைஜெயந்தி என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் சீரியல்களிலும் நடித்துள்ள நடிகர் ஆனந்த், கே.பாலச்சந்தர் இயக்கத்தில், வெளியான டூயட் படத்தில் நான் தான் ஹீரோ. பாலச்சந்தர் படத்தை யாராவது வேண்டாம்என்று சொல்வார்களா? பைத்தியக்காரத்தனமாக யாரோ சொல்வதை கேட்டு விட்டுவிட்டேன்.Thiruda Thiruda Anand😔அந்த படத்துல சம்பள விஷயத்துல தப்பு பண்ணிட்டேன்💔இப்போதும் இதை நினைத்தால் என் மேல் கோபமாக வருகிறது. சம்பள விஷயம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல், மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தில் கார்த்திக் நடித்த கேரக்டரில் என்னை தான் நடிக்க சொன்னார்கள். ரோஜா படத்தில் முதலில் என்னைத்தான் கேட்டார்கள். அந்த படத்தின் டைலாக் கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒரு கட்டத்தில் எனக்கு எல்லா படமும் தோல்வி. பட வாய்ப்பே இல்லை. இதை தெரிந்துகொள்ளவே எனக்கு 6 மாதங்கள் ஆனது என்று நடிகர் ஆனந்த் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.