சினிமா
“லவ் மேரேஜ்” படம் சூப்பர்.! விக்ரம் பிரபு நடிப்பை பாராட்டிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
“லவ் மேரேஜ்” படம் சூப்பர்.! விக்ரம் பிரபு நடிப்பை பாராட்டிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் உணர்வு பூர்வதன்மையும் நகைச்சுவையும் சரியாக கலந்த படமான “லவ் மேரேஜ்” ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த திரைப்படம், குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன காதலையும் சித்தரிக்கும் படமாக அமைந்திருந்தது.இந்த நிலையில், திரைப்படத் துறையில் வித்தியாசமான படைப்புகளைக் கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “லவ் மேரேஜ்” படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பாராட்டு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.அதன்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “‘லவ் மேரேஜ்’ திரைப்படம் சூப்பர். காமெடியிலும் உணர்வுபூர்வமான காட்சியிலும் விக்ரம் பிரபு சிறப்பாக நடித்திருந்தார். என்னைப் போன்ற 90’s குழந்தைகளுக்கு அந்த கதாபாத்திரம் மிகவும் ஒத்துபோகும்.பிரியன் அருமையாக கதை எழுதி அதை இயக்கியும் உள்ளார். படத்தின் மிகப்பெரிய தூண் ஷான் ரோல்டன் தான். அனைவரும் திரையரங்கில் காணவேண்டிய படம் தான்.” எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.