இலங்கை
வடமாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்
வடமாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்
ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலப் பாடங்களில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு – 1(அ) தரப் பதவிக்கு பட்டதாரி களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்குமாறு கடந்த 20ம் திகதி கோரப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலை அடிப்படையாகக்கொண்டு,
இவ் ஆசிரிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்திவைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தலுக்கு அமைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறுஅறிவித்தல் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு பதில் செயலாளர் எ.அன்ரன் யோக நாயகம் தெரிவித்துள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை