சினிமா
வெளியானது ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் ட்ரெய்லர்.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…
வெளியானது ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தின் ட்ரெய்லர்.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…
தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் “பவர் ஸ்டார்” என அழைக்கப்படும் நடிகர் பவன் கல்யாண் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் “ஹரி ஹர வீரமல்லு”. பல வருடங்களாக திட்டமிடப்பட்டு வந்த இப்படம், பல தடைகளை கடந்து, தற்போது ஜூலை 24ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இதன் பின்னணியில் இன்று (ஜூலை 3) இப்படத்தின் மாஸான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிய பிரமாண்ட சரித்திரப் படம் என்றே இதனை ரசிகர்கள் கூறுகிறார்கள்.வரலாற்றில் மறைந்துபோன வீரர்களில் ஒருவரான “ஹரி ஹர வீரமல்லு” என்பவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டே இப்படம் எடுக்கப்பட்டது. ட்ரெய்லரில் பவன் கல்யாணின் மாஸ் லுக், ஆக்ஷன் காட்சிகள், சரித்திரக் கதையின் பெருமை ஆகியவை தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.