சினிமா

ஸ்ரீகாந்த் கைது..! நயன்தாரா ,திரிஷா ஏன் பேசவில்லை..நடிகை ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

Published

on

ஸ்ரீகாந்த் கைது..! நயன்தாரா ,திரிஷா ஏன் பேசவில்லை..நடிகை ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

தெலுங்கு சினிமா நடிகை ஸ்ரீ ரெட்டி 2018 ஆண்டில் தெலுங்கில் பல இயக்குநர்கள் தனக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்வதாக பல சர்ச்சைகளை கிளப்பி ஒரு நாள் அரை நிர்வாண போராட்டத்தையும் நிகழ்த்தினார். இதைவிட தமிழ் சினிமாவிலும் விஷால் ,ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பட வாய்ப்பு தருவதாக கூறி தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக பல ஊடகங்களில் ஓபனாக பேசினார். இந்த நிலையில் தற்போது போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீ காந்த் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய அவர் ஆரம்பத்தில் ஸ்ரீகாந்த் மீதும் தனது கால் கை இரண்டையும் கட்டி நாக்கில் விருப்பமில்லாமல் போதைக்கு அடிமையாக்க முயற்சி செய்ததாக கூறி இருந்தார். அவர் அப்போது கூறியதை யாருமே மதிக்கவில்லை ஆனால் தற்போது அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் சமீபத்தைய நேர்காணலில் நடிகை இது தான் கர்மா என கூறியுள்ளார். இவர் மட்டுமல்லாமல் பெரிய தயாரிப்பாளர்கள் அரசியல்வாதிகள் என பலர் இதற்கு முக்கிய காரணம் எனவும் கூறியுள்ளார்.மேலும் இந்த வழக்கு குறித்து பெரிய நடிகைகளான திரிஷா ,நயன்தாரா ஏன் டுவிட் போடவில்லை அவர்களுக்கு பணம் சம்பாதிக்கணும் இப்படியான controvecy களில் சிக்கினால் பெயர் போய்விடும் என பயப்படுறாங்க அதனால் தான் இவங்க யாரும் support பண்ணுறதில்லை லேடி சூப்பர் ஸ்டார் என இருக்காங்க ஆனால் லேடிஸ்க்கு ஏதும் பிரச்சினை வந்தா ஏன் குரல் கொடுக்கிறதில்லை என பலவற்றை ஓபனாக பேசியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version