வணிகம்
Today Gold Rate 3rd July: தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இல்லத்தரசிகள் கவலை
Today Gold Rate 3rd July: தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இல்லத்தரசிகள் கவலை
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர்ப்பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வந்தது.இந்தச் சூழலில், நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்திருந்தது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.9,065-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.72,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மேலும் ஏற்றத்தை கண்டுள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ரூ.72,840-க்கும், ஒரு கிராம் ரூ.9,105-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:03.07.2025 – ஒரு சவரன் ரூ. 72,840 (இன்று)02.07.2025 – ஒரு சவரன் ரூ. 72,520 (நேற்று)01.07.2025 – ஒரு சவரன் ரூ. 72,16030.06.2025- ஒரு சவரன் ரூ. 71,32029.06.2025- ஒரு சவரன் ரூ. 71,44028.06.2025- ஒரு சவரன் ரூ. 71,440