இந்தியா

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை; 37க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Published

on

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை; 37க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 37க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மலைப்பகுதி முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 400 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் இமாச்சலப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையகம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு நிலையம் ஜூலை 7ஆம் திகதி வரை மாநிலத்திற்கு மழை எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மாநிலத்தின் மண்டி மாவட்டம் அனர்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக துனாக் துணைப்பிரிவில் வீதிகள் செல்ல முடியாத நிலையில் உள்ளன.

Advertisement

மேலும், மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மண்டி மாவட்த்தில் மாத்திரம் 40 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்திய விமானப்படையால் உணவுப் பொட்டலங்கள் விமானம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version