இலங்கை
முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் பயங்கரம் ; துயரத்தில் பக்தர்கள்
முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் பயங்கரம் ; துயரத்தில் பக்தர்கள்
முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரின் கலசம் விழுந்து ஒருவர் பலியானதுடன் பலர் படுகாயம் அடைதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததாக தெரியவந்துள்ளது.கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் ஆயல தேர்திருவிழாவில் இடம்பெற்ற அனர்த்தம் பகதர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.