இலங்கை
அதிபர் பதவிக்கு விண்ணப்பங்கள்
அதிபர் பதவிக்கு விண்ணப்பங்கள்
யாழ்ப்பாணம்- எழுதுமட்டுவாழ் ஸ்ரீ கணேசா வித்தியாலயம், யா/கெற்பெலி அ.த.க.பாடசாலை, யா/கரம்பைக் குறிச்சி அ.த.க.பாடசாலை, யா/ மட்டுவில் தெற்கு சாந்தநாயகி வித்தியாலயம், யா/சரசாலை ஸ்ரீ கணேசா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தென்மராட்சிக் கல்வி வலயத்தினால் கோரப்பட்டுள்ளன.
இந்தப் பதவிக்கு வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற இலங்கை அதிபர் சேவை வகுப்பு IIஐச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் வகுப்பு IIIஐச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடம் பொருத்தமான பாடசாலைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் மாதிரி விண்ணப்பப்படிவத்தை வலயக்கல்வி அலுவலகத்தில் பெற்று எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத்தபாலில் வலயக்கல்விப் பணிப்பாளர், வலயக்கல்வி அலுவலகம் தென்மராட்சி ஹென்ஸ்மன் வீதி, சாவகச்சேரி எனும் முகவரிக்கு கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் அதிபர் பதவிக்கான விண்ணப்பம் 2025 எனக் குறிப்பிட்டு அனுப்பிவைக்கவேண்டும்.
விண்ணப்பதாரி ஆகக்குறைந்தது 3 வருட காலமேனும் சேவையாற்றக் கூடிய வயதெல்லையை உடையவராக இருத்தல் வேண்டும் . வகை | பாடசாலைகளுக்கு இலங்கை அதிபர் சேவையில் வகுப்பு IIIஐ உடையவராக இருத்தல்வேண்டும். அதிபர் வகுப்பு I| ஐச் சேர்ந்த அதிபர்கள் அதிபர் சேவையில் வகுப்பு IIIஐச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் கருத்திற்கொள்ளப்படும். வகை பாடசாலைகளுக்கு இலங்கை அதிபர் சேவையில் வகுப்பு IIIஐ உடையவராக இருத்தல் வேண்டும். மாகாணக் கல்வியமைச்சின் அதிபர் பதவி வெற்றிடம் நிரப்புதல் சுற்றுநிருப இல2023/03. 2023/03Aஇற்கு அமைய தெரிவு மேற்கொள்ளப்படும். வலய நேர்முகத்தேர்வுச்சபையின் நேர்முகப் பரீட்சைப் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு மேற்கொள்ளப்பட்டு சேவை நிலையம் வழங்கப்படும். மேற்படி தெரிவுசெய்தல் தொடர்பாக வடமாகாணக் கல்விச் செயலாளரின் தீர்மானம் இறுதியானதாகும்.