இலங்கை
இந்தியாவில் கொள்ளையடித்து லண்டனில் ஆட்டம்போடும் விஜய் மல்லையா!
இந்தியாவில் கொள்ளையடித்து லண்டனில் ஆட்டம்போடும் விஜய் மல்லையா!
இந்தியாவில் கடுமையான நிதி குற்றங்களைச் சந்தித்து லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி ஒன்றில் இணைந்து பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
அவர்கள் இருவரும் லண்டனில் நடைபெற்ற ஒரு ஆடம்பர விருந்தில் இருவரும் பாடல்களைப் பாடி மகிழ்வது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
லலித் மோடி ஏற்பாடு செய்திருந்த இந்த விருந்தில் 310க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லும் இந்த விருந்தில் பங்கேற்று லலித் மோடி மற்றும் மல்லையாவுடன் ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
“இது நிச்சயமாக சர்ச்சைக்குரியது. ஆனால் நான் அதைத்தான் செய்கிறேன்” என்ற தலைப்புடன் இந்த வீடியோவை லலித் மோடியே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.
மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன்களை ஏய்ப்பு செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மோடி மற்றும் விஜய் மல்லையா ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வது விவாதப் பொருளாக மாறியுள்ளது.