இலங்கை

இலங்கைக்கு கடத்துவதற்காக இருந்த 132 கிலோ கடல் அட்டைகள் பாம்பனில் பறிமுதல்!

Published

on

இலங்கைக்கு கடத்துவதற்காக இருந்த 132 கிலோ கடல் அட்டைகள் பாம்பனில் பறிமுதல்!

தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த
பாம்பன் கடற்கரையில் 132 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

 பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இன்று, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

Advertisement

சட்ட விரோதமாக கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக மண்டபம் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

 தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் அங்கு ஒரு குடிசையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 132 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version