இலங்கை

இலங்கையில் இன்று முதல் புதிய பேருந்து கட்டணங்கள்

Published

on

இலங்கையில் இன்று முதல் புதிய பேருந்து கட்டணங்கள்

  வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறைந்தபட்ச பொது சேவை பேருந்து கட்டணமான ரூ. 27, இரண்டாவது கட்டணமான ரூ. 35 மற்றும் மூன்றாவது கட்டணமான ரூ. 45 ஆகியவற்றில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது.

Advertisement

புதிய திருத்தத்தின் படி, ரூ. 56, 77, 87, 117, 136 மற்றும் 141 போன்ற கட்டணங்கள் ரூ. 1 குறைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், சில கட்டணங்கள் ரூ. 2 அல்லது ரூ. 3 வீதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதிகபட்ச பொது சேவை கட்டணமான ரூ. 2170 இல் ரூ. 11 குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கட்டண குறைப்பு, பொது சேவைகள், அரை சொகுசு, அதிசொகுசு சேவைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் இயங்கும் அனைத்து வகை பேருந்துகளுக்கும் பொருந்தும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version