இலங்கை

கரைச்சி சபையின் தவிசாளர் வேழமாலிகிதனை நீக்க தமிழரசுக்கட்சி திட்டம்; விளக்கம் கோரிக் கடிதம்

Published

on

கரைச்சி சபையின் தவிசாளர் வேழமாலிகிதனை நீக்க தமிழரசுக்கட்சி திட்டம்; விளக்கம் கோரிக் கடிதம்

தமிழரசுக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை தவிசாளர் அ. வேழமாலிகிதனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் உள்ளதாவது:-
கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதியன்று, தாங்களும் இன்னும் மூவரும் மாகாண ஆளுநரை சந்தித்து உரையாடியதாக அறியக்கிடைத்தது. அந்த மூவரில் ஒருவர் அண்மையில் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட ஜீவராசா என்றும் அறியக்கிடைத்தது. இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சிக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிட்டவர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் எமக்கெதிராக போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தவர் என்பதும் நீங்கள் நன்கு அறிந்த விடயங்கள். வெளிப்படையாகவே கட்சிக்கு எதிராக செயற்படும் ஒருவர் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றில் உங்களுடன் சேர்ந்து கலந்து கொள்வதும் அது பகிரங்க செய்தியாக வெளிவருவதும் கட்சியின் நலனை வெகுவாகப் பாதிக்கும் என்பது தாங்கள் அறிந்திருக்க வேண்டிய தொன்று.

Advertisement

கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தங்களுக்கு போட்டியிட சந்தர்பம் வழங்க முன்னர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டமைக்கு தாங்கள் மன்னிப்பு கோரியதோடு எதிர்காலத்தில் இப்படியான குற்றத்தை செய்தால் எவ்வித விசாரணையுமின்றி கட்சியில் இருந்தும் கட்சி சார்பில் வகிக்கும் பதவியிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதற்கு உங்களது ஒப்புதலை வழங்கியுள்ளீர்கள்.

ஆகவே, ஜீவராசா போன்ற ஒருவரை ஆளுநரை சந்திக்க சென்ற உத்தியோகபூர்வ குழுவில் சேர்த்துக் கொண்ட குற்றத்துக்காக நீங்கள் ஏன் கட்சியில் இருந்து நீக்கப்படக் கூடாது? என்ப தற்கு எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் எழுத்துமூலம் தெரியப்படுத்த வேண்டும். இல்லையெனில் அல்லது திருப்திகரமான பதில் அளிக்காவிட்டால் நீங்கள் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவீர்கள் என்பதை இத்தால் தங்களுக்கு அறியத் தருகின்றேன்- என்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version