இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்களிடையே அதிகரித்துள்ள மது மற்றும் போதைப்பொருள் பாவனை

Published

on

கர்ப்பிணித் தாய்மார்களிடையே அதிகரித்துள்ள மது மற்றும் போதைப்பொருள் பாவனை

கொழும்பு தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை, மொரட்டுவை மற்றும் எகொட்ட உயன உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களிடையே மது அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்த விடயம் கவலைகளை எழுப்புகிறது என தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் வைத்திய நிபுணருமான சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

Advertisement

இது தொடர்பில் வைத்திய நிபுணருமான சமல் சஞ்சீவ மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் கரையோர பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்களில் பலர் மது மற்றும் போதைப்பொருள் பாவனையிலும், வர்த்தகத்திலும் ஈடுபடுவது பொதுவான ஒரு விடயமாக காணப்படுகிறது.

இது ஒரு பெரும் பொது சுகாதாரப் பிரச்சினை ஆகும். இதனை சுகாதாரத்துறையால் மட்டும் கையாள முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பிற அரச திணைக்களங்கள், சமூக சேவை அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம்.

Advertisement

இந்த கர்ப்பிணிப் பெண்களில் பெரும்பாலோர் சுகாதார அதிகாரிகளிடம் தங்களைப் பதிவு செய்வதையோ அல்லது வைத்தியசாலைகளுக்குச் சென்று பரிசோதனை செய்வதையோ தவிர்த்து வருகின்றனர்.

இதனால் மருத்துவக் குழுக்கள் அவர்களுக்கு சரியான ஆலோசனை மற்றும் கவனிப்பை வழங்குவது கடினமாகிறது. அவர்களில் பலர், பிரசவத்திற்குப் பின்னர் வைத்தியசாலைகளுக்குச் செல்லவோ அல்லது தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவோ மறுக்கிறார்கள்.

நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இந்தப் பகுதிகளில் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதால், பொது மக்களிடையே சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்த தாய்மார்களில் பலர் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்களின் கணவர்கள் பெரும்பாலும் போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையாகிறார்கள். அல்லது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

மது, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவுவதற்கும் மறுவாழ்வு அளிப்பதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று அவசரமாக அறிமுகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்த சமூகங்களில் கடுமையான பொது சுகாதார நெருக்கடி ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version