இலங்கை
காணிக்கு சென்ற வயோதிருக்கு எமனாக மாறிய காட்டு யானை
காணிக்கு சென்ற வயோதிருக்கு எமனாக மாறிய காட்டு யானை
அநுராதபுரம் – தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மலியதேவபுர பகுதியில் நேற்று (03) காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மலியதேவபுர, தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வயோதிபர் ஆவார்.
வயோதிபர் தனது காணியில் பொருத்தப்பட்டிருந்த மின் வேலியின் மின்சாரத்தை துண்டிக்கச் சென்றபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம், தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.