பொழுதுபோக்கு
கிரிக்கெட் டூ சினிமா… தமிழ் திரையுலகில் நடிகர் அவதாரம் எடுக்கும் சுரேஷ் ரெய்னா
கிரிக்கெட் டூ சினிமா… தமிழ் திரையுலகில் நடிகர் அவதாரம் எடுக்கும் சுரேஷ் ரெய்னா
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.உத்தர பிரதேசத்தின் ஒரு சிறிய நகரத்திலிருந்து வந்து, இந்தியாவின் மிகவும் முக்கியமான கிரிக்கெட் வீரராகவும், உலகக் கோப்பை வென்றவராகவும் ரெய்னாவின் பயணம், மன உறுதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மட்டுமின்றி ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்காகவும் ரெய்னாவின் பங்களிப்பு இன்றியமையாதது. இதன் காரணமாக தமிழ் ரசிகர்களுக்கு ரெய்னாவை மிகவும் பிடிக்கும். இந்த சூழலில் தனது வாழ்வின் அடுத்தகட்ட பயணத்தை நோக்கி ரெய்னா நகர்கிறார்.அதன்படி, ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட இருக்கும் முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார். லோகன் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.