பொழுதுபோக்கு
கீர்த்தி சுரேஷ் அம்மாவுடன் கல்யாண கிசுகிசு; கடைசியில் நடந்த ட்விஸ்ட்: சீக்ரெட் உடைத்த ஒரு தலை ராகம் ஷங்கர்!
கீர்த்தி சுரேஷ் அம்மாவுடன் கல்யாண கிசுகிசு; கடைசியில் நடந்த ட்விஸ்ட்: சீக்ரெட் உடைத்த ஒரு தலை ராகம் ஷங்கர்!
நடிகை கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகாவுடன் எனக்கு கல்யாண கிசு கிசு இருந்த்து. ஆனால் இறுதியில் என் நெருங்கிய நண்பர் சுரேஷ் அவரை திருமணம் செய்துகொண்டார். இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று நடிகர் ஷங்கர் கூறியுள்ளார்.தமிழில் பன்முக திறமையாளர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான முதல் படமாக ஒரு தலை ராகம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷங்கர். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, ஒரு தலை ராகம் ஷங்கர் என்று அழைக்கப்பட்ட அவர், படம் வெளியாகி 45 ஆண்டுகளை கடந்தாலும், அதன்பிறகு பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு தலை ராகம் ஷங்கர் என்ற பெயர் மட்டும் மாறவே இல்லை.ஒரு தலை ராகம் படத்திற்கு பிறகு சுஜாதா, கோயில் புறா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த ஷங்கர், மீண்டும், டி.ராஜேந்தர் இயக்கத்தில், ராகம் தேடும் பல்லவி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்து காதல் என்னும் நதியினிலே, எம்.ஜி.ஆர் நகரில், தாயம்மா, நினைத்து நினைத்து பார்த்தேன், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர், கடைசியாக 2015-ம் ஆண்டு, மணல் நகரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஷங்கர், மோகன்லால் அறிமுகமான மஞ்ச விரிச்ச பூக்கள் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் சில படங்களை இயக்கியுள்ள ஷங்கர் சமீபத்தில் ஒரு நேர்கணாலில் தனது சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார். திருச்சூரில் பிறந்த நான், சென்னையில் வளர்ந்தேன். இங்குதான் திரைப்பட கல்லூரியில் படித்தேன். அப்போது தான் ஒரு தலை ராகம் வாய்ப்பு கிடைத்து.திரைப்பட கல்லூரியில், ரஜினி சார் எனக்கு முந்தைய பேட்ச், சிரஞ்சீவி நானும் ஒன்றாக படித்தோம். ஒரு தலை ராகம் படத்தின் நடிகர்கள் தேர்வு செய்யப்படும்போது என்னை அங்கு வர சொல்லி டி.ராஜேந்தர் கதையை சொன்னார். அப்போது எனக்கு முன்பே 2 பேர் நடிக்க தேர்வாகி இருந்தார்கள். ஆனால் தயாரிப்பாளர் நான் தான் ராஜா கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால் ராஜேந்தர் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு சீட்டு எழுதி போட்டு பார்த்தார்கள். எனக்கு அதிஷ்டம் இருந்தால் என் பெயர் வந்தது. அதில் நடித்தேன்.நான் நடித்த காலக்கட்டத்தில், கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகாவுடன் 30 படங்களில் இணைந்து நடித்திருக்கிறேன். இதனால் நாங்கள் இருவரும் தான் கல்யாணம் செய்துகொள்ள போகிறோம் என்று செய்திகள் வெளியானது. கிசுகிசுக்கள் பரவியது. மற்ற நடிகைகளுடன் 2-3 படங்கள் மட்டுமே நடித்திருந்ததால், இப்படி வந்தது. அதன்பிறகு என் நெருங்கிய நண்பர் சுரேஷ் தான் மேனகாவை திருமணம் செய்துகொண்டார். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்கள் இருவருக்கும் பிடித்திருந்தது திருமணம் செய்துகொண்டார்கள். நானும் காதல் திருமணம் தான். ஆனால் வீட்டில் சொல்லித்தான் திருமணம் செய்துகொண்டேன் என்று ஷங்கர் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பிகைண்ட்வுட்ஸ் சேனலில் வெளியாகியுள்ளது,