சினிமா
சுதாகரின் வார்த்தையால் ஆவேசத்தில் கோபி; சோககடலில் மூழ்கிய பாக்கியா குடும்பம்! டுடே எபிசொட்
சுதாகரின் வார்த்தையால் ஆவேசத்தில் கோபி; சோககடலில் மூழ்கிய பாக்கியா குடும்பம்! டுடே எபிசொட்
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி பாக்கியாவப் பாத்து சுதாகர் நம்ம வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தப்போவே நான் உஷார் ஆகியிருக்கணும் இவ்வளவு பெரிய பணக்காரர் எப்புடி நம்ம வீட்டுக்கு பொண்ணு கேட்டு வருவார் என்று நினைச்சிருக்கணும் என்கிறார். அதுக்கப்புறமாவது நிதீஷை பற்றி விசாரிச்சிருக்கணும் என்று சொல்லுறார். மேலும் நான் உன்னை நம்பியிருக்கணும் என்று பாக்கியாட சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார் கோபி.இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி இனியாவைப் பார்த்து எப்புடி எல்லாம் வளர்த்தேன், மகாராணி மாதிரி இருந்தவளை அவங்க இப்புடி பண்ணிட்டாங்களே என்று சொல்லி அழுகுறார். மேலும் அவங்க எல்லாம் நல்லாவே இருக்கமாட்டாங்க என்று கோபமாக சொல்லுறார். அதை அடுத்து ஜெனியும் இனியாவை பாத்து நிதீஷ் இப்புடி நடந்துக்கிட்ட போதே சொல்லியிருக்கலாம் நாம பொலீஸிட்ட கம்பிளைன் பண்ணியிருக்கலாம் என்கிறார்.பின் பாக்கியா வீட்ட வந்து நிதீஷுக்கு முன்னாடியே போதை பழக்கம் இருந்தது என்பது உண்மை தான் என்கிறார். அதைக் கேட்டவுடனே செழியன் ஷாக் ஆகுறார். இதனை அடுத்து கோபி ஈஸ்வரியைப் பாத்து சுதாகர் என்கிட்ட திமிரா பேசினார் என்று சொல்லுறார். பின் ஈஸ்வரி அடுத்து என்ன செய்யலாம் என்டதை ஜோசிக்கலாம் என்கிறார். இதனைத் தொடர்ந்து பாக்கியா இனியாவை பாத்து இனி எல்லாத்தையும் நாம பாத்துக்கிறோம் என்கிறார்.பின் சுதாகர் தன்ர மனைவியைப் பார்த்து நிதீஷுக்கு சப்போர்ட் பண்ணி மட்டும் பேசாத என்று சொல்லுறார். மேலும் இனியா வேற மீடியாவில இருக்கிறாள் அவள் ஏதாவது செய்திட்டால் பெரிய பிரச்சனை ஆகிடும் அவளை முதலில வீட்ட கூட்டிட்டு வரணும் என்கிறார். மறுநாள் காலையில ஈஸ்வரி இனியாவைப் பாத்து இந்த சின்ன வயசில ஆண்டவன் உனக்கு இப்டி ஒரு பிரச்சனையை கொடுத்திட்டான் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.