சினிமா

டொவினோத் தாமசின் “நரிவேட்டை” ஓடிடி ரிலீஸ்…!தேதியை அறிவித்த படக்குழு…!

Published

on

டொவினோத் தாமசின் “நரிவேட்டை” ஓடிடி ரிலீஸ்…!தேதியை அறிவித்த படக்குழு…!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக  வலம்  வருபவர் டொவினோ தாமஸ்இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார் . மேலும் இவர்  நடித்துள்ள மலையாள திரைப்படம் “நரிவேட்டை” (Narivetta) விரைவில்  ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம்,  ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இப்படத்தை ‘இஷ்க்’ திரைப்பட இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இசை அமைப்பை ஜேக்ஸ் பெஜாய் (Jakes Bejoy) கவனித்துள்ளார். காட்சிப்பதிவு, வசனம் மற்றும் பின்னணி இசை எல்லாம் படத்தின் உணர்வை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. “நரிவேட்டை” திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் ஜூலை 11, 2025 முதல் ஸ்ட்ரீம் செய்யபட உள்ளதாக  படக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது . ரசிகர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே இந்த திரைப்படத்தை பார்க்க  முடியும். திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே நல்ல விமர்சனங்களைப் பெற்றது இந்த படம் . டொவினோவின் நடிப்பு, கதையின் தன்மை மற்றும் சமூகப் பொருத்தம் ஆகியவை பெரிதும் பாராட்டப்பட்டன. சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். “நரிவேட்டை” திரைப்படம் ஒரு சமூக உணர்வையும், உண்மையின் துருவ சக்தியையும் திரையிலே நெடுக காட்டும் ஒரு படைப்பு. நீதி மற்றும் அதிகார வரம்புகளுக்கு இடையே நிகழும் மோதல் எப்படி மனித வாழ்வை பாதிக்கிறது என்பதைத் துல்லியமாக சொல்லும் இந்த திரைப்படம் என பதிவிட்டு வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version