இலங்கை
தே.ம.சக்திக்குள் குழப்பம் என்பது தோற்றவர்களின் கட்டுக்கதையே; அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
தே.ம.சக்திக்குள் குழப்பம் என்பது தோற்றவர்களின் கட்டுக்கதையே; அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
அரசாங்கத்துக்குள் எவ்வித குழப்பமும் இல்லை. 2030 ஜனாதிபதித் தேர்தலையும் தேசிய மக்கள் சக்தியாகவே எதிர்கொள்வோம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்று வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- ஜே.வி.பி.யின் முயற்சியால் தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்திக்குள் எவ்வித முரண்பாடும் கிடையாது. அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்த தரப்புகளே இப்படியான கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அவர்களின் பகல் கனவு ஒருபோதும் நனவாகாது. தேசிய மக்கள் சக்தி மேலும் வலுப்படுத்தப்படும். 2030ஆம் ஆண்டுத் தேர்தலைக் கூட தேசிய மக்கள் சக்தியாகவே எதிர்கொள்வோம் – என்றார்.