சினிமா
பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்..! கதறி அழும் ரசிகர்கள்… வெளியான அதிர்ச்சித் தகவல்..
பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்..! கதறி அழும் ரசிகர்கள்… வெளியான அதிர்ச்சித் தகவல்..
ஹாலிவூட் திரையுலகில் தனிச்சிறப்பு வாய்ந்த நடிகராக வலம் வந்த மைக்கேல் மேட்சன் மாரடைப்பால் காலமானார் என்பதை அவரது குடும்பம் தற்பொழுது உறுதிப்படுத்தியுள்ளது. 67 வயதாகிய இவர், பல படங்களில் நடித்து அதிகளவான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார்.மைக்கேல் மேட்சன் என்பவர் உலகப் புகழ்பெற்ற “Reservoir Dogs” மற்றும் “Kill Bill” போன்ற திரைப்படங்களில் தனது ஆழமான குரல், சிறப்பான முகபாவனை மற்றும் அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவரது திரைப்பட பயணத்தில் 350க்கும் மேற்பட்ட ஹாலிவூட் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும்போது மைக்கேல் மேட்சன், ஒரு பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அவர் திரைப்படத்துறையில் பல்வேறு பரிமாணங்களில் கலக்கியவர். அத்தகைய மைக்கேல் மேட்சனின் மரண செய்தி வெளியானதும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களது இரங்கலை பதிவு செய்தனர்.