இந்தியா

புதுச்சேரி பைனான்ஸ் ஏஜெண்ட் தற்கொலை: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தமிழர் வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்

Published

on

புதுச்சேரி பைனான்ஸ் ஏஜெண்ட் தற்கொலை: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய தமிழர் வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்

புதுச்சேரி தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மேனேஜர் மற்றும் கலெக்சன் ஏஜென்ட் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என தமிழர் வாழ்வுரிமைக் கட்சி அறிவுள்ளது .இது குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி திருக்கனூர் சூரக்கோட்டை சார்ந்தவர் மல்லிகை கடை வியாபாரி பெரியசாமி. புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள வெர்டாஸ் ஃபைனான்ஸ் (VERITAS FINANCE) நிறுவனத்தில் கடந்து 2020 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டு அடமானம் வைத்து ரூ8 லட்சம் கடன் பெற்றுள்ளார்.இந்த கடனை வட்டியுடன் சேர்த்து 11 லட்சம் ரூபாய் காலம் தாமதம் இன்றி சரியாக செலுத்தி வந்தார். பின்பு மாதந்தோறும் கட்ட வேண்டியது நிலுவைத் தொகையை 10 நாட்கள் தாமதமாக மாதந்தோறும் செலுத்தி வந்ததாக தெரிய வருகிறது .இது சம்பந்தமாக வெர்டாஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் கலெக்ஷன் ஏஜென்ட் முருகன் அந்த நிறுவனத்தில் மேலாளர் ஜெயச்சந்திரன் பெரியசாமி வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர்.மேலும், அவரை தகாத வார்த்தையில் பேசியதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மத்தியில் அவரை அசிங்கப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெரியசாமி, கடந்த மூன்று 15.3.2025 காலை அவர் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது சம்பந்தமாக திருகுனூர் காவல் நிலையம் அதிகாரிகள் சந்தேகம் மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.பெரியசாமி நடத்தி வந்த மல்லிகை கடை திறந்து சுத்தம் செய்த போது அவர் இறப்பதற்கு முன்பாக வெர்டாஸ் ஃபைனான்ஸ் (VERITAS FINANCE) ஊழியர்கள் அவரை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் வீட்டு  அருகாமையில் உள்ள மக்கள் மத்தியில் அவரை அசிங்கப்படுத்தியதாகவும் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளதை அவர் மகன் கண்டறிந்து திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.அந்த புகாரை பெற்றுக்கொண்ட திருக்கனூர் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த கையெழுத்தை தடவியல் துறைக்கு ஆய்வுக்காக அனுப்பினர். பெரியசாமி கையெழுத்தையும் ஏற்கனவே அவர் எழுதி வைத்துள்ள கையெழுத்து மாதிரி உடன் அதையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். கடந்த வாரம் அந்த தடவியல் துறையில் இருந்து பெரியசாமி எழுதிய கடிதம் அவருடைய கையெழுத்து தான் என்று உறுதி செய்யப்பட்டு.அதன் அடிப்படையில் நேற்றைய தினம் திருக்கனூர் காவல்துறை அதிகாரிகள் வெர்டாஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில், பணிபுரியும் மேனேஜர் ஜெயச்சந்திரன் மற்றும் கலெக்சன் ஏஜென்ட் முருகன் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளார்கள். உடனடியாக VERITAS FINANCE பணி செய்த ஊழியர்கள் தான் பெரியண்ணசாமியின் இறப்புக்கு காரணம் என்று வழக்கு செய்த திருக்கனூர் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக குற்றவாளிகளை எந்த ஒரு காலதாமதம் இன்றி கைது செய்ய வேண்டும்.இதில் காவல்துறை ஏதேனும் தாமதமாக நடவடிக்கை மேற்கொண்டால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றோம்  என்று  கூறியுள்ளார்

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version