பொழுதுபோக்கு

மூக்குத்தி அம்மன் 2, பொள்ளாச்சி படப்பிடிப்பு நிறைவு: ரசிகர்களுடன் போட்டோ எடுத்த நயன்தாரா!

Published

on

மூக்குத்தி அம்மன் 2, பொள்ளாச்சி படப்பிடிப்பு நிறைவு: ரசிகர்களுடன் போட்டோ எடுத்த நயன்தாரா!

சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வரும் நடிகை நயன்தாரா,  குடும்பத்துடன் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேசன் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து 2-ம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவையில் தொடங்கியது.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கடந்த சில நாட்களாக மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புக்காக கடந்த சில நாட்களாக கோவையில் தனது குடும்பத்துடன் முகாமிட்டுள்ள நடிகை நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார். இதனிடையே நேற்று கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்,இதனைத் தொடர்ந்து மீண்டும் கோவை திரும்பிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நயன்தாரா, இன்று மதியம் படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்புவதற்காக தனது குடும்பத்துடன் கோவை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு அவரை பார்க்க கூடியிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நயன்தாரா, அதன்பிறகு, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விமானம் மூலமாக சென்னை சென்றடைந்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version