சினிமா
மோனே சாய் Welcome To மலையாளம் சினிமா..! வைரலாகும் நடிகரின் பதிவு..
மோனே சாய் Welcome To மலையாளம் சினிமா..! வைரலாகும் நடிகரின் பதிவு..
மலையாள சினிமாவில் புதிய இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாக உள்ளார். இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பல்டி’ திரைப்படத்தின் மூலம் சாய் தனது இசை பயணத்தை தொடங்குகிறார்.இந்த சிறப்பு அறிவிப்பை மோகன்லால் அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்து “மோனே சாய் Welcome To மலையாளம் சினிமா ” என மனதளவில் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் ‘பல்டி’ திரைப்படம் வரும் ஓணத்தையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டணி மலையாள இசை ரசிகர்களிடையே புதிய அலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வரும் சாய் தமிழில் rj பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “கருப்பு ” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.