இலங்கை
யாழில் இளைஞர் ஒருவர் திடீர் உயிரிழப்பு
யாழில் இளைஞர் ஒருவர் திடீர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் உயிரிழப்புக்கு காரணம் தெரியவராத நிலையில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.