இலங்கை

யாழில் சைவ ஆலயம் ஒன்றில் விக்கிரகம் திருட்டு

Published

on

யாழில் சைவ ஆலயம் ஒன்றில் விக்கிரகம் திருட்டு

யாழ்ப்பாண ஆலயமொன்றின் கூரையைப் பிரித்து ஐம்பொன் விக்கிரகம் ஒன்று திருட்டுப் போயுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் ஆலயத்தில் இருந்த ஐம்பொன் எழுந்தருளி விக்கிரகம் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

Advertisement

அடையாளம் தெரியாத திருட்டுக் கும்பலொன்று நேற்று (3) குறித்த ஆலயத்தின் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்து விக்கிரகத்தை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த விக்கிரகத்தின் பெறுமதி சுமார் 10 இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விக்கிரகம் திருடப்பட்டது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

முறைப்பாட்டுக்கமைய மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version