இலங்கை
வரி விகிதங்கள் கடிதங்களை அனுப்பும் டிரம்ப் நிர்வாகம்; பீதியில் உலக நாடுகள்
வரி விகிதங்கள் கடிதங்களை அனுப்பும் டிரம்ப் நிர்வாகம்; பீதியில் உலக நாடுகள்
ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து அறிவிக்கும் கடிதங்களை தனது நிர்வாகம் அனுப்பும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதங்களை அனுப்பும் செயல் இன்று (04) ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை வியட்நாமுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை அறிவித்த டிரம்ப், இதற்குப் பிறகும் ‘பல புதிய ஒப்பந்தங்களில்’ கையெழுத்திட அவர் எதிர்பார்த்துள்ளார்.
வர்த்தக மற்றும் வரி கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தன்னுடைய நிர்வாகம் தொடங்கியுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் டிரம்ப்பின் வரி விதிப்பால் பல நாடுகள் பெரும் இக்கட்டான நிலைக்கு முகம் கொடுத்துள்ளதுடன், பொருளாதார நெடுக்கடி ஏற்படலாம் என்ற அச்சத்தையும் உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.