பொழுதுபோக்கு
ஆரம்பரத்தால் அழிவு; புகழும் – போதையும் செய்யும் வேலை இதுதான்: நடிகர் சந்திரபாபு குறித்து பிரபலம் சொன்ன தகவல்!
ஆரம்பரத்தால் அழிவு; புகழும் – போதையும் செய்யும் வேலை இதுதான்: நடிகர் சந்திரபாபு குறித்து பிரபலம் சொன்ன தகவல்!
தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், கதாசிரியர் என பன்முக திறமையுடன் வலம் வந்த சந்திரபாபு, பாடல் பாடுவதில் ஆர்வம் கொண்டாவராக இருந்துள்ளார். பழம்பெரும் நடிகர், டி.ஆர்,மகாலிங்கம் 1947-ம் ஆண்டு வெளியான தனா அமராவதி என்ற படத்தில் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளர். அதன்பிறகு 1951ம் ஆண்டு மோகன சுந்தரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.டி.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பு இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சின்னதுரை படத்தில், டி.ஜி.லிங்கப்பா இசையில், சந்திரபாபு ஒரு பாடலை பாடியிருந்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக யூட்லிங் பாடலை பாடியதும், ஆங்கில பாடலை பாடியதும் சந்திரபாபு தான். அதேபோல் முதல் வெஸ்டர்ன் பாடல்களை பாடியதும் அவர்தான். இப்படி பல திறமைகளை கையில் வைத்திருந்த சந்திரபாபு சில படங்களுக்கு கதையும் எழுதியள்ளார்.எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சந்திரபாபு, தனது கடைசி காலத்தில் பட வாய்ப்பு இல்லாமல், சொத்துக்களை இழந்து வறுமையில் வாடி உயிரிழந்துள்ளார். இதற்கு காரணம் என்ன என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகி வந்தாலும், தற்போது கண்ணதாசனின், உறவினர் சாந்தி கண்ணப்பன் சந்திரபாபு குறித்தும், அவரது கடைசிகட்ட நிலை குறித்து பேசியுள்ளார்.சந்திரபாபு பெரிய குடும்பத்தில் பிறந்தவர், அவரது அப்பா ஒரு சுதந்திரபோராட்ட வீரர். ஆனால் சந்திரபாபு தனது வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொள்ளவில்லை. ஆனால் குடும்பத்தில் யாரையும் தனது அருகில் சேர்த்துக்கொள்ளாத சந்திரபாபு, நடித்து புகழ் சேர சேர, தன்னை சுற்றி ஒரு கூடடத்தை உருவாக்கிக்கொண்டார். கார் கதவை திறக்க ஒரு ஆள், தனக்கு வணக்கம் சொல்ல ஒரு ஆள் என்று ஆடம்பரத்தை விரும்பியுள்ளார். புகழ் சேர்ந்தவுடன் தன்னை மறந்த நிலைக்கு சென்றுவிட்டார்ஒரு கட்டத்தில் அவருக்கு அனைத்துமே தோல்வியில் முடிந்தது. ஒரு நடிகனாக தனி திறமையுடன் இருந்தாலும், சந்திரபாபு, சினிமாவில் நுழைந்து தனது திறமையால், முன்னணியில் வலம் வந்தார். வெஸ்டர்ன் இசையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் பிறந்து வளர்ந்து சூழல் நன்றாக இருந்துது. புகழும் போதையும் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது? தன்னிலை மறந்த நிலையை எப்படி உருவாக்குகிறது என்பவதற்கு சந்திரபாபு உதாரணம்.இப்போது இதை ஏன் பேசுகிறோம் என்றால் இன்றைய சமூகத்தில் இதை நாம் அதிகம் பார்க்கிறோம். பழைய நடிகர்களின் வாழ்க்கையில் இருந்து நாம் பல பாடங்களை கற்றுக்கொள்ளலாம். சினிமா நட்சத்திரங்கள் எப்படி வாழ கூடாது என்பதற்கு சந்திரபாபு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதேபோல் பல நடிகைகள் சொத்துக்களை இழந்திருக்கிறார்கள் என்று சாந்தி கண்ணப்பன் கூறியுள்ளார்.