பொழுதுபோக்கு

சிம்பு-நயன் ஜோடிக்கு பிறகு நாங்கதான் இதை செய்திருக்கோம்: வனிதா விஜயகுமார் ஓபன் டாக்

Published

on

சிம்பு-நயன் ஜோடிக்கு பிறகு நாங்கதான் இதை செய்திருக்கோம்: வனிதா விஜயகுமார் ஓபன் டாக்

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், சில ஆண்டுகள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற படத்தை இயக்கி இயக்குநராக மாறி இருக்கிறார். இப்படத்தை அவரின் மகளான ஜோவிகா தயாரித்து இருக்கிறார். 11-ம் தேதி தியேட்டரில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தத் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு Filmibeat Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.’மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படம் குறித்து பல சுவாரசியமான விஷயத்தை வனிதா கூறினார். படத்தை இயக்குவதற்கு ஐடியாவே என்னிடம் இல்லை, கதையை மட்டும்தான் நான் எழுதி வைத்திருந்தேன். அந்த நேரத்தில்தான் கதைக்குள் ராபர்ட் வந்தார். படப்பிடிப்பும் தொடங்கிய 2 நாள் சென்று விட்டது. அப்போதுதான் ராபர்ட், வேறு ஒரு இயக்குனரை ஏன் தேட வேண்டும் நீயே படத்தை இயக்கலாமே என்றார். அதைத் தொடர்ந்து, ஆர்த்தி கணேஷூம் உங்களால் முடியும் என்று சொன்னார். பல நடிகர்களும் எனக்கு ஆதரவு தெரிவித்ததால், நான் இந்தப் படத்தை இயக்கினேன். வேறு வழியே இல்லாமல்தான் இந்தப் படத்தில் கடைசி நேரத்தில் இயக்குனராக மாறினேன். என் வாழ்க்கையில் பல விஷயங்கள் கடைசி நேரத்தில் தான் நடந்திருக்கு அதேபோல இந்தப் படத்தை நான் இயக்கியதும் என்றார்.பிரேக் அப் செய்து பிரிந்த பின் ராபர்ட்டுடன், அதுவும் கணவன் மனைவியாக ஒரு படத்தில் நடிப்பது என்பது சாதாரண விஷயமே இல்லை. மறந்து விட்டோம், பிரிந்து விட்டோம். அவருக்கு வேறு வாழ்க்கை இருக்கிறது. எனக்கு வேறு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று தெரிந்தாலும், மனதிற்குள் சின்ன சின்ன விஷயங்களுக்கு Possessive மற்றும் கோபமும் வரத்தான் செய்யும். பிரேக்அப் செய்து பிரிந்த பின், நயன்தாரா, சிம்பு இருவரும் சேர்ந்து நடித்தார்கள். அதன் பின் ராபர்ட்டும் நானும் சேர்ந்து நடித்துள்ளோம். இதனால், பல நேரத்தில் படப்பிடிப்பில் எனக்கும் ராபர்ட்டுக்கும் சண்டை வரும். ஆனால், அடுத்த நாள் காலை நாங்கள் சரியாகி விடுவோம். எங்களுடன் வேலையை பார்த்த நடிகர்கள் தான் மண்டையை உடைத்துக்கொள்வார்கள்.நானும் ராபர்ட் மாஸ்டரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தோம். ஆனால், அந்த நேரம் அது அமையாமல் போய்விட்டது. ஏனென்றால், அவருக்கு அந்த நேரம் விவகாரத்து ஆகவில்லை. இதனால், திருமணம் நடக்காமல் போய்விட்டது. ஆனால், எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்தே தீரும். இந்தப் படத்திற்காக நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியாக நடித்தபோது, பல நேரத்தில் எமோஷனலாக பல விஷயங்கள் நினைத்து கண்கலங்கினோம். படத்தில் தாலி கட்டுவது போல, வரும் காட்சியில், ராபர்ட் உண்மையிலேயே மிகவும் எமோஷனல் ஆகிவிட்டார். இதனால், ஒவ்வொரு முறையும் அவருடைய கை நடுங்கியது. இப்படி பதற்றத்திலே 40 முறைக்கு பிறகுதான் டேக்கே ஓகே ஆனது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version