சினிமா

“தாயாக பிறப்பதற்குப் பிறகே உண்மையான பாசம் என்னவென்று புரிந்தது”!விசித்திரா ஓபன் டாக்…!

Published

on

“தாயாக பிறப்பதற்குப் பிறகே உண்மையான பாசம் என்னவென்று புரிந்தது”!விசித்திரா ஓபன் டாக்…!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த விசித்திரா, தற்போது மூன்று குழந்தைகளின் தாயாக வாழும் தன் வாழ்க்கைப் பயணத்தை மிக உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர், தாய்மையின் உண்மையான அர்த்தத்தை தன் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் விளக்கினார். அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன . அவர் கூறும் போது தாயாகும் அனுபவம் என்பது இயல்பாகவே மகிழ்ச்சியும், சவால்களும் நிறைந்த ஒன்று. ஆனால், அந்த அனுபவம் ஒருவர் எதிர்பார்ப்பது போல எளிதாக இல்லாமல் இருக்கக்கூடும் என்பதையும் விசித்திரா வெளிப்படையாகச் சொல்கிறார். “முதல் பிரசவத்துக்குப் பிறகு எனக்கு மெமரி லாஸ் மாதிரி ஒரு பீலிங் வந்தது. தூக்கம் இல்ல, மூன்று குழந்தைகளும் ஒரே நேரத்தில் அழும்போது என்ன செய்யலாம் என்று தெரியாம உட்கார்ந்திருக்க நேரிட்டது.” இதுதான் போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன் (Postpartum Depression) எனும் மனநிலை என பின்னர் உணர்ந்ததாகவும், இது குறித்து ஏராளமான பெண்கள் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.மேலும் கூறும் போது விசித்திரா ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். தாயாகி வாழும் காலத்தில் பல நேரங்களில் தனியே குழந்தைகளை பராமரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. “ஹவுஸ் ஹெல்ப் கிடைக்கல. கணவர் வெளியூர்ல வேலை. எனக்கு மட்டுமே எல்லா பொறுப்பும் வந்துச்சு.” இந்நிலையில் குழந்தைகளை வளர்ப்பது சிரமமாக இருந்தாலும், அதே சமயம் அவர்களுக்காக காட்டும் பாசமும் மிகுந்தது. ஆனால் முதல் குழந்தையின் வளர்ச்சியில் சில பிழைகள் ஏற்பட்டதாகவும், அது அவரை ஆழமாக பாதித்ததாகவும் கூறினார் .“முதல் பையனுக்கு ரொம்ப ப்ரொடெக்டிவா இருந்தேன். அதனால் அவன் வளர்ச்சியில் சிறிய டிலே வந்துச்சு. ரெண்டாவது பசங்களோ… அதுக்கப்புறம் நானே ஃப்ரீயா விட்டேன்.” எனக் கூறியிருந்தார் .இன்றைய சமூக சூழ்நிலையில் பெற்றோர் அனுபவிக்கும் சவால்கள் குறித்து அவர் மிக தெளிவாக பேசுகிறார்.“நம்மள வளர்த்த மாதிரி இப்போ வளர்க்க முடியாது. பாதுகாப்பு, சமூக அச்சம், புல்லியிங் எல்லாம் அதிகமாயிருக்கு. ஆண்களுக்கே இப்போ அப்யூஸ் வரக்கூடிய சூழ்நிலை இருக்கு.” இவ்வாறான சூழ்நிலைகள் பெற்றோருக்கு பலவிதமான திணறல்களை ஏற்படுத்துவதாகவும், குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு இன்னும் கடுமையாகி வருவதாகவும் அவர் கூறுகிறார்.பிரசவத்திற்கு பின் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் மாற்றங்கள் குறித்து பெரும்பாலானோர் பேசத் தயங்குகின்ற நிலையில், விசித்திரா தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்.“முதல்ல என் வயரையே பார்க்க முடியல. ஸ்ட்ரெச் மார்க்ஸ், வெயிட், எல்லாம் வேற. ஆனா மூனு பசங்கன்னு வந்த பிறகு எனக்கு என் உடம்பு பற்றிப் பயப்பட நேரமையே இல்ல.” “அவர்களுக்கான பாசமே முக்கியம். என் பசங்களை நல்லா வளர்க்குறதுதான் எனக்கு முக்கியமான லட்சியம்.” எனக் குறியிருந்தார் . விசித்திராவின் வாழ்க்கை, திரையுலகத்தின் பிரபலம் எனும் அடையாளத்தைவிட, இன்று ஒரு தாயாக நிற்கும் அவரது நிலைதான் பலருக்குத் தைரியம் தருவதாக இருக்கிறது. அவர் கூறும் வார்த்தைகள், தாய்மையின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் உள்ளன . “தாய்மையென்றால் ஒரு நிலை மட்டுமல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கை மாற்றம். குழந்தைகளுக்கு நான் ஒரு மென்மையான இடமாக இருக்கவேண்டும் என்பதற்காக என் ஆளுமையையே மாற்றிக்கொண்டேன்.” எனக் கூறியிருந்தார் . தன் உண்மையான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்த நடிகை விசித்திரா, இன்று பல பெண்களுக்கு உற்சாகம், உறுதி, மற்றும் உறுதியான பெற்றோராக மாற்றம் காணும் சிந்தனை ஏற்படுத்தியுள்ளார். தாயாக இருப்பது பெரும் பொறுப்பும், பரிசும் என்பதை அவர் தன்னம்பிக்கையுடன் எடுத்துரைக்கிறார். குழந்தைகளை வளர்ப்பதில் வரும் சவால்கள், மாற்றங்கள், மற்றும் மகிழ்ச்சிகள் அனைத்தையும் அவர் தனது சொந்த வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த நேர்காணல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version