சினிமா
நயனுக்கு முன்பே 40 வருடங்களுக்கு முன் பிரைவேட் ஜெட், கப்பல்கள் வாங்கிய நடிகை!! யார் தெரியுமா?
நயனுக்கு முன்பே 40 வருடங்களுக்கு முன் பிரைவேட் ஜெட், கப்பல்கள் வாங்கிய நடிகை!! யார் தெரியுமா?
சினிமா பிரபலங்கள் விலையுயர்ந்த பங்களா, தனி விமானம், தனித்தீவு, கப்பல் என அதையெல்லாம் வாங்கிக்குவிப்பது சகஜமாகிவிட்டது. சமீபத்தில் கூட நடிகை நயன்தாரா தனி பிரைவேட் ஜெட்டை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்தியளவில் முதன்முறையாக பிரைவேட் ஜெட் வாங்கியிருக்கிறார் ஒரு நடிகை. விமானம் மட்டுமில்லாமல் பல கப்பல்களுக்கும் சொந்தக்காரியாக இருந்திருக்கிறார்.அவர் வேறுயாருமில்லை, புன்னகை அரசி கே ஆர் விஜயா தான். 1960, 70 காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்துள்ளார் கே ஆர் விஜயா. பல இயக்குநர்களுடன் பணியாற்றி பெருமை சேர்த்த கே ஆர் விஜய, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து அசத்தினார்.தென்னிந்திய மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, ஒராண்டுக்கு 10 படங்களாவது அவர் நடிப்பில் வெளியாகுமாம். உச்சத்தில் இருந்த கே ஆர் விஜயா, 1966ல் திருமணம் செய்து நடிப்பில் இருந்து விலகினார். அதன்பின் கணவரின் அனுமதியுடன் நடிக்க ஆரம்பித்தார். பிரபல தொழிலதிபர் சுதர்சன் வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டு கோடீஸ்வரியாக திகழ்ந்தார். சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தை நடந்தி வந்தார் சுதர்சன்.சமீபத்தில் கே ஆர் விஜயாவின் சகோதரியும் நடிகையுமான கே ஆர் வத்சலா அளித்த பேட்டியில், பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், ஷூட்டிங்கிற்கு சென்று வர கே ஆர் விஜயா, சொந்தமாக விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இதுதவிர 4 கப்பல்கள் சொந்தமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்திய சினிமாவிலேயே முதன்முதலாக பிரைவேட் ஜெட் மற்றும் கப்பல்கள் வைத்திருந்த முதல் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நடிகை கே ஆர் விஜயா.