பொழுதுபோக்கு

பாக்ஸ் ஆபிஸில் பல்டி… ரசிகர்களின் கவனத்தை பெற்றதா சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ்?

Published

on

பாக்ஸ் ஆபிஸில் பல்டி… ரசிகர்களின் கவனத்தை பெற்றதா சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ்?

சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்டாக கிடைத்த வேடங்களில் நடித்து பின்னர், சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. கடின உழைப்பால் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்ட விஜய் சேதுபதி, இன்று பான்-இந்தியா அளவில் பேசக் கூடிய நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு சூர்யா சேதுபதி என்கிற மகன் உள்ளார். இவரும் விஜய் சேதுபதி உடன் ”நானும் ரெளடி தான்”, ”சிந்துபாத்” போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.இந்த நிலையில், ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார் சூர்யா சேதுபதி. இப்படத்தில் தேவதர்ஷினி, வரலட்சுமி சரத்குமார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். பீனிக்ஸ் படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி இருந்தது. இப்படத்திற்காக பிரத்யேகமாக சண்டைப் பயிற்சி எடுத்து நடித்துள்ளார் சூர்யா. சாம் சி.எஸ் இசையமைத்திருந்த இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.பீனிக்ஸ் திரைப்படத்தை தன் மகன் உடன் சேர்ந்து விஜய் சேதுபதியும் புரமோட் செய்தார். இருந்தாலும் இப்படத்திற்கு பெரியளவில் ஹைப் கிடைக்கவில்லை. புரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா நடந்து கொண்ட விதம் சிலருக்கு பிடிக்காததால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். விஜய் சேதுபதி போல் கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் வராமல், தன் தந்தை தயவோடு ஈஸியாக வந்துவிட்டதாக விமர்சித்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் பீனிக்ஸ் படம் ரிலீஸ் ஆனது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. படத்தின் கதைக்களம், வெளியீட்டு தேதி தேர்வு, மற்றும் படத்திற்கான விளம்பர உத்திகள் ஆகியவை எதிர்பார்த்த அளவுக்கு மக்களைச் சென்றடையவில்லை என்று தெரிகிறது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்த ஆரம்பக்கட்ட விமர்சனங்களும் படத்திற்குப் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இது முதல்நாள் வசூலில் எதிரொலித்துள்ளது.சித்தார்த், சரத்குமார் நடித்த 3 பி.ஹெச்.கே, இயக்குனர் ராம் இயக்கிய பறந்துபோ ஆகிய படங்களுக்கு போட்டியாக பீனிக்ஸ் ரிலீஸ் ஆனது. மற்ற 2 படங்களைக் காட்டிலும் பீனிக்ஸ் படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வசூல் மட்டுமே கிடைத்துள்ளது. பீனிக்ஸ் படம் முதல் நாளில் வெறும் 10 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இது மற்ற 2 படங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வசூல்.பறந்து போ திரைப்படம் முதல் நாளில் ரூ.42 லட்சமும், 3 பிஹெச்கே திரைப்படம் முதல் நாளில் ரூ.1 கோடிக்கு மேலும் வசூலித்திருந்தன. அதோடு ஒப்பிடுகையில் பீனிக்ஸ் படு மோசமாக வசூலித்துள்ளது. வீக் எண்ட்டில் இப்படத்தின் வசூல் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version