இலங்கை

ஹரக் கட்டா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

Published

on

ஹரக் கட்டா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணை பணியகத்தின் காவலில் உள்ள ஹரக் கட்டா, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிடி ஸ்கேன் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

வயிற்று வலி காரணமாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹரக் கட்டா நேற்று (04) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version