இலங்கை
இரகசிய தகவலால் ஐந்து பெண்களை கைது செய்த பொலிஸார்
இரகசிய தகவலால் ஐந்து பெண்களை கைது செய்த பொலிஸார்
ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை சுற்றிவளைத்த பின்னர், ஐந்து பெண்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கட்டுகஸ்தோட்டை நகருக்கு அருகில் அமைந்துள்ள மசாஜ் மையத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.