இலங்கை

தமிழர் பகுதியில் நேர்ந்த துயரம் ; விளையாடிக்கொண்டிருந்த 3 சிறுவர்களுக்கு நேர்ந்த கதி

Published

on

தமிழர் பகுதியில் நேர்ந்த துயரம் ; விளையாடிக்கொண்டிருந்த 3 சிறுவர்களுக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு வாகரை கருவப்பன்சேனை குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ள துயரச்சம்வம் இடம்பெற்றுள்ளது.

உறவினர்களுடன் மீன் பிடிக்கச் சென்றவேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பனிச்சங்கேணியைச் சேர்ந்த 12 வயதுடைய க.சானுஜன் மற்றும் 10 வயதுடைய க.டிக்ஷன் ஜெ.ருக்ஷானா ஆகிய மூன்று சிறுவர்கயே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் பணிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களாவார்

Advertisement

மூவரும் குளத்தின் கரையோரத்தில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் காணப்பட்ட பாரிய குழியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கோடை காலமானதால் குளத்தில் நீர் மட்டம் குறைந்து காணப்படுவதோடு இக்காலங்களில் குளத்தில் மீன் மீடித் தொழில் ஈடுபடுபவர்கள் சிலர் தங்களது குடும்பத்துடன் பகுதிக்கு சென்று தங்கி நின்று இரவு பகலாக மீன் பிடித் தொழில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும்.

இவ்வாறான நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

உயிரழந்தவர்களின் சடலம் உடற்கூற்றாய்விற்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாரலக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வாகரை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version