இலங்கை

பயணியின் தொலைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தி ; அவசரமாக தரையிரக்கப்பட்ட விமானம்

Published

on

பயணியின் தொலைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தி ; அவசரமாக தரையிரக்கப்பட்ட விமானம்

அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் ‘RIP’ என்ற குறுஞ்செய்தி இருந்தமையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளின் போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுயானில் இருந்து 193 பயணிகளுடன் அமெரிக்காவின் தல்லாஸ் நகருக்கு குறித்த விமானம் சென்றுகொண்டிருந்தது.

Advertisement

இதன்போது, விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் ‘RIP’ என்ற குறுஞ்செய்தி வந்ததாக அவருக்கு அருகில் இருந்த பெண் ஒருவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக விமானப் பணிப்பெண் ஒருவரை அழைத்த அருகில் இருந்த பெண், ‘RIP’ என்ற குறுஞ்செய்தி வெடிகுண்டு மிரட்டலாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், குறித்த பணிப்பெண் விமானியிடம் தகவலை தெரிவிக்க, அவர் உடனே இஸ்லா வெர்டேவுக்கு விமானத்தை திருப்பி அவசரமாக அதனை தரையிறக்கியுள்ளார்.

Advertisement

இதனையடுத்து, நடந்த விசாரணைகளில் குறுஞ்செய்தியை பெற்ற பெண் மீது எந்த தவறும் இல்லை என தெரியவந்துள்ளது.   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version