இலங்கை

வங்கிக்குள் புகுந்து பெரும் அடாவடி செய்த காட்டு யானை ; தமிழர் பகுதியில் சம்பவம்

Published

on

வங்கிக்குள் புகுந்து பெரும் அடாவடி செய்த காட்டு யானை ; தமிழர் பகுதியில் சம்பவம்

காட்டு யானை ஒன்று, வெள்ளிக்கிழமை (05) அதிகாலை மதவாச்சியில் உள்ள வங்கி ஒன்றிற்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதவாச்சி நகருக்கு வந்த யானை, மன்னார் சாலையில் மதவாச்சி பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள  வங்கிக்குள் புகுந்து, வங்கியின் பிரதான கண்ணாடி கதவை உடைத்து, வங்கி வளாகத்திற்குள் நுழைந்து அதன் கூரையை சேதப்படுத்தியுள்ளது.

Advertisement

யானை வங்கிக்குள் நுழைந்து அங்கு நடந்து சென்று, மீண்டும் வங்கியிலிருந்து வெளியே வந்து அருகிலுள்ள கோவிலுக்குள் புகுந்து, வாழைப்பழங்கள் மற்றும் பலாப்பழங்களை சாப்பிட்டதுடன், கோவில் தோட்டத்திற்குள்ளும் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

யானை தாக்குதலால் மக்கள் வங்கி கட்டிடம் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளதாகவும், வங்கியில் உள்ள பணம் மற்றும் பெட்டகத்தில் உள்ள தங்க பொருட்கள் உட்பட அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[N06CTWB]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version