இலங்கை

10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டுக்காரர்

Published

on

10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டுக்காரர்

பத்து வயது சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் நேற்று (05) அன்று புத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

புத்தல காவல் பிரிவில் உள்ள ஊவா பெல்வத்த குமாரகம குடியிருப்பு வசித்துவரும் இந்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் வேலை செய்கிறார், தந்தை கூலித் தொழிலாளி அச்சிறுவனுக்கு இரண்டு தம்பிகளும் உள்ளனர்.

Advertisement

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் குறித்த சிறுவன்,  33 வயதுடைய குறித்த சந்தேக நபரின் வழங்க வீட்டிற்குச் சென்ற போது கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 சிறுவன் வீட்டுக்கு திரும்பியதும் தனக்கு நேர்ந்ததை தந்தையிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவ பரிசோதனைக்காக புத்தல பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

சந்தேக நபர் புத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version