பொழுதுபோக்கு
90-களில் நான் வாங்கிய முதல் செல்போன்; விலை கேட்ட சிரிப்பீங்க: நடிகர் ஆனந்தராஜ் ஜாலி தகவல்!
90-களில் நான் வாங்கிய முதல் செல்போன்; விலை கேட்ட சிரிப்பீங்க: நடிகர் ஆனந்தராஜ் ஜாலி தகவல்!
90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர் ஆனந்தராஜ். தற்போது காமெடி வில்லனாக கலக்கி வரும் இவர், இன்றைய காலக்கட்ட ட்ரெண்டுக்கு மாறிக்கொள்ள வேண்டும் என்றும், அரசியல் சூழ்ச்சியால் தான் நிறைய பட வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் 90-களில் முக்கிய வில்லன் நடிகராக இருந்தவர் ஆனந்தராஜ். ரஜினிகாந்த் முதல் விஜயகாந்த் வரை முன்னணி நடிகர்களின் பல படங்களில் வில்லன் கேரக்டரில் மிரட்டிய ஆனந்த்ராஜ், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதே சமயம், சில படங்களில் ஒரே ஒரு சண்டைக்காட்சிகாகவும் நடித்து கொடுத்துள்ளார். இவரின் நடிப்பை பார்த்து பாட்ஷா படத்தை தன்னை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் கேரக்டரை அவருக்கு கொடுத்தவர் ரஜினிகாந்த்.தற்போது பல வெற்றிப்படங்களில் காமெடி வில்லன் கேரக்டரில் கலக்கி வரும் ஆனந்தராஜ், சமீபகாலமாக வெளியாகும் பல படங்களில் நடித்துள்ளார். இப்போதும் பிஸியான நடிகராக வலம் வரும் அவர், சமீபத்தில் ஒரு பேட்டியில், அரசியல் சூழ்ச்சியானால் தன்னால் நிறைய படங்களில் நடிக்க முடியாமல் போனது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இன்றைய காலக்கட்டத்தில், உருட்டு, பூமர் அங்கிள் உள்ளிட்ட வார்த்தைகள் கேட்கவே ஜாலியாக இருக்கிறது. காலத்திற்கு ஏற்படி நாமும் மாறிக்கொள்ள வேண்டியது தான்.இன்றைய காலக்கட்டத்தில் செல்போன ஈஸியாக கிடைக்கிறது. நாங்கள் இன்டஸ்ரிக்கு நுழைந்த காலக்கட்டத்தில் எங்களிடம் போனே இல்லை. போன் கனெக்ஷன் வாங்க வேண்டும் என்றால் அப்போதே ரூ15 ஆயிரம் கட்ட வேண்டும். அப்படி கட்டினால், உடனடியாக நம்பர் கொடுத்துவிடுவார்கள். ரூ800 காட்டினால் 3 வருடங்கள் ஆகும் அதன்பிறகு தான் நம்பர் கொடுப்பார்கள். அப்போது எல்லாம் லேன்லைன் நம்பர் 4 தான் இருக்கும். அதனால் நம்பர் கிடைப்பது கஷ்டம். இப்போ தான் 8 நம்பர் ஆகி இருக்கிறது.அதன்பிறகு ஒரு கட்டத்தில் பேஜர் வந்தது. அதில் இன்று பில் கட்டுங்கள் இல்லை என்றால் உங்கள் கனெக்ஷன் கட் என்று மெசெஜ் வரும். நான் பேஜர் பயன்படுத்தவில்லை. அதன்பிறகு தான் செல்போன் வந்தது. முதல் போன் சோனியில் சிக்னல் வைத்து வந்தது. சிட்டியில் பேசலாம். ஆனால் வெளியில் சென்றால் எடுக்காது. அந்த செல்போன் விலை கேட்டால் சிரிப்பீங்க. விலை ரூ43000. இந்த போனை இன்னும் நான் வைத்திருக்கிறேன். இப்படி காலம் மாற மாற நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் தான் இப்போது 2கே ட்ரெண்டுக்கு மாற்றிவிட்டேன்.அம்மாவின் ஆட்சியின் நான் பல படங்களில் நடித்தேன். ஆனால் அடுத்து எதிர்கட்சியாக இருந்தபோது நான் பல பட வாய்ப்புகளை இழந்தேன். அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு பல படங்களில் நடிக்க முடியாமல் போனது என்று சினியுலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த போட்டியில் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.