சினிமா
MODERN DRESS போட்டா தப்பானவங்களா? வனிதா கேள்வி..
MODERN DRESS போட்டா தப்பானவங்களா? வனிதா கேள்வி..
பிரபல வாரிசு நடிகை வனிதா விஜயகுமார் எழுதி இயக்கியுள்ள ms and mrs திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஜோவிகா மற்றும் வனிதா பல ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகின்றார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை இவர் பெண்களின் உடை மற்றும் சமூக பார்வை குறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது “பொண்ணுங்க மார்டன் ஆக டிரஸ் பண்ணாங்க என்றால் அதுக்காக அவங்க யாருகிட்ட வேணாலும் பேசிடுவாங்க, யார் கூட வேணும்னாலும் வெளியே போயிடுவாங்க, டேட்டிங் பண்ணுவாங்க என்று நிறைய பேர் தப்பா நினைச்சுட்டு இருக்காங்க. அது உண்மை கிடையாது. குறிப்பாக சினிமாவில் ரொம்ப சிம்பிளா, எளிமையாக இருக்காங்க என்றால் அது அவர்களுடைய விருப்பம். அதுக்காக அவங்களுடைய கேரக்டரை நிர்ணயிக்கிறது எல்லாம் ரொம்ப தப்பான விஷயம். இப்ப ஜோவிகா ஆர்டிஸ்ட் ஆக நடிக்கிறதுக்கு என்டர் ஆக போறாங்க. கண்டிப்பாக அவங்களுக்கு ஃபேன்ஸ் உருவாக்கணும், திறமை இருந்தாலும் வாய்ப்புகள் வரணும், அதுக்கேத்த மாதிரி உடைகள் தான் நம்ம போட முடியும்” என்றும் வலியுறுத்தினார்.