பொழுதுபோக்கு

அக்கவுண்ட் நம்பர் தெரியாது, ஒரு செக் எழுத தெரியாது; சம்பளம் பற்றி யோசிக்க மாட்டேன்: டி.எஸ்.பி ஓபன் டாக்

Published

on

அக்கவுண்ட் நம்பர் தெரியாது, ஒரு செக் எழுத தெரியாது; சம்பளம் பற்றி யோசிக்க மாட்டேன்: டி.எஸ்.பி ஓபன் டாக்

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (டி.எஸ்.பி) சமீபத்தில் ஒரு நேர்காணலில், பணம் மற்றும் வெற்றியுடனான தனது உறவு குறித்து வெளிப்படையாகப் பேசினார். தனது தனிப்பட்ட நிதி விஷயங்கள் குறித்து தனக்கு எந்த அறிவும் இல்லை என்றும், மகிழ்ச்சி மற்றும் கலை திருப்திக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் பிஹைன்வுட்ஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  டி.எஸ்.பி இதுவரை என்னோட அக்கவுண்ட் நம்பர் எனக்கு தெரியாது. நான் செக் எப்படி எழுதணும், போகணும், எடுக்கணும் எதுவுமே எனக்கு தெரியாது. நான் பார்த்ததும் இல்லை; எந்த படத்துக்கு எவ்வளவோ காசு வந்துச்சு, பேலன்ஸ் இருக்கா, வந்துச்சா, போச்சா எதுவுமே நான் பார்த்தது இல்லை என்றார். மேலும் நான் எப்புமே அத கவுண்ட் பண்ணி பார்த்ததில்ல, நான் எவ்வளோ படம் பண்ணனேனே நான் கவுண்ட் பண்ணி பாக்கல. எனக்கு எண்கள் மீதும் நம்பிக்கை இல்லை. நீ சம்பாதிக்கிற காசு விட நீ செலவளிக்காத காசு உன்கிட்ட இல்லாத மாதிரிதான்.  நம்மளுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் நம்ம ஸ்பெண்ட் பண்ணனும் என்றார்.என்ன விட காசு இருக்கு பல பேர் இருக்காங்க. அவங்க எல்லாரு கிட்ட என்கிட்ட இருக்கற எனர்ஜி இருக்கா? என்கிட்ட இருக்க சந்தோஷம் இருக்கா? அதனால அமௌன்ட் ஆஃப் மணி யூ ஹாவ் நாட் டைரக்ட்லி புரொபோர்ஷனல் டூ யுவர் ஹாப்பினஸ் என்கிறார். ஒரு கலைஞராக, டி.எஸ்.பி-க்கு தனது படைப்பின் செயல்முறைதான் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக கூறுகிறார். ஒன்ஸ் நீங்க கேட்டு வாவ், வாவ்ன்னு மத்தவங்க சொல்ல தேவையில்ல, நான் கேட்டப்ப எனக்கே தோணும் அது வாவ்ன்னு… அந்த வாவ்ன்னு எனக்கு தோணனப்போ ஜர்னி இஸ் கம்ப்ளீட் என்றார்.தான் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் முழு கவனத்தையும் செலுத்துவதாக டி.எஸ்.பி குறிப்பிட்டார். கான்ஃபிடென்ஸ் வெரி வெரி இம்பார்ட்டன்ட். நான் எல்லாம் இன்ஜூஸ் சொல்லி இல்ல கான்ஃபிடென்ஸ் தாண்டி நீங்க பேசும் பொழுது எனக்கு இன்னைக்கு வந்து இன்னொரு முக்கியமான விஷயம் நான் என்னைய கூட உதாரணமா சொல்லுவேன்.அக்செப்டன்ஸ் அது இல்லன்னா எவரிடே நம்ம சிரிச்சிட்டே இருக்க முடியாதுங்க தனக்கு டென்ஷனே பார்க்க முடியாது என்றும் பேஸ்ல போனதும் தெரியாது வந்ததும் தெரியாது என்றும், தனது வாழ்க்கையை பணத்துடன் இணைக்கவில்லை என்றும் அவர் கூறினார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version