இலங்கை

ஈழத்தமிழர் பட்ட அவலத்தின் சாட்சியே செம்மணிப் புதைகுழி; மனோ எம்.பி. தெரிவிப்பு

Published

on

ஈழத்தமிழர் பட்ட அவலத்தின் சாட்சியே செம்மணிப் புதைகுழி; மனோ எம்.பி. தெரிவிப்பு

ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமே செம்மணிப் புதை குழி .அப்பாவி மக்கள் கொன்று புதைக்கப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இது மனித உரிமை மீறலாகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவம், அரச பயங்கரவாதம், பேரினவாத அடக்கு முறை, எதேச்சாதிகாரம், போர் வெற்றி என்பவற்றால் நடந்தது தான் செம்மணிப் புதைகுழி. அங்கே இருப்பது எம்மவர்களின் எலும்புக்கூடுகள். அப்பாவி மக்களைக் கொலை செய்வது, பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது போன்ற செயல்கள் ஏற்க முடியாதவை. இவை மனித உரிமைமீறல்கள். போர் முடிந்தாலும் போர் ஏற்படுவதற்கு வழி சமைத்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
எனவே, அதிகாரப்பகிர்வின் அவசியத்தை அமைச்சர் சந்திரசேகர் எடுத்துரைக்க வேண்டும் – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version