பொழுதுபோக்கு
தாத்தாவாக நடித்த அதே நடிகருக்கு ஜோடியான ஸ்ரீதேவி: தென் இந்திய சினிமாவில் பேசுபொருளான வயது வித்தியாசம்
தாத்தாவாக நடித்த அதே நடிகருக்கு ஜோடியான ஸ்ரீதேவி: தென் இந்திய சினிமாவில் பேசுபொருளான வயது வித்தியாசம்
இந்திய சினிமாவில் கதாநாயகர்களுக்கும் கதாநாயகிகளுக்கும் இடையிலான வயது இடைவெளி குறித்த விவாதம் கடந்த சில ஆண்டுகளாகப் பலமுறை எழுப்பப்பட்டுள்ளது. 40 மற்றும் 50 வயதுகளில் உள்ள நடிகர்கள், தங்களை விட 20-30 வயது இளைய கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடிப்பது விமர்சிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், இந்த போக்கு இன்றும் தொடர்கிறது, இது புதிய டிரெண்ட் அல்ல. பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. ஆனால், இதில் மிகவும் அதிர்ச்சியூட்டும் உதாரணம் 1979-ம் ஆண்டு வெளியான ஒரு படத்தில் இருந்து வருகிறது. அதில், 56 வயதான சூப்பர் ஸ்டார், 16 வயதான நடிகையுடன் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைவிட அதிர்ச்சி, சில ஆண்டுகளுக்கு முன்பு அதே நடிகர் அவருக்குத் தாத்தாவாக நடித்திருந்தார்.தாத்தாவில் இருந்து காதலனாக: ஒரு அபூர்வமான மாற்றம்இந்திய சினிமா கண்ட மிக வெற்றிகரமான மற்றும் செல்வாக்குமிக்க நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி. 80 மற்றும் 90களின் முன்னணி நட்சத்திரமாக அறியப்பட்டாலும், அவர் தனது திரைப்பயணத்தை 60-களிலேயே குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கினார். 1972 ஆம் ஆண்டு, தனது 9 வயதில், ‘படி பந்துலு’ (Badi Panthulu) என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அந்தப் படத்தில், அப்போதைய புகழ்பெற்ற தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி. ராமராவ் (என்.டி.ஆர்.), ஸ்ரீதேவிக்கு தாத்தாவாக நடித்திருந்தார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு, 1978-ல், ஸ்ரீதேவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அடுத்த ஆண்டே, அதாவது 16 வயதில், அவர் ‘வேட்டகாடு’ (Vetagaadu) என்ற படத்தில் என்.டி.ஆருக்கு கதாநாயகியாக நடித்தார். அப்போது என்.டி.ஆருக்கு 56 வயது. அதாவது, ஸ்ரீதேவியை விட 40 வயது மூத்தவர். இது இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் வயது இடைவெளிகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.’வேட்டகாடு’ படத்தின் தனித்துவமான சிக்கல்இந்தியப் படங்களில் இதைவிட பெரிய வயது இடைவெளிகள் இருந்திருக்கின்றன. உதாரணமாக, ‘நிஷாப்த்’ படத்தில் அமிதாப் பச்சன், ஜியா கான் விட 46 வயது மூத்தவர். ஆனால், அந்தப் படம் வயது இடைவெளியையே கதைக்களமாகக் கொண்டிருந்தது. ஆனால், ‘வேட்டகாடு’ படத்தில், ஸ்ரீதேவி மற்றும் என்.டி.ஆரின் கதாபாத்திரங்கள் ஒரே வயது வரம்பில் இருப்பதாகக் காட்டப்பட்டது. இது, என்.டி.ஆர். 7 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதேவிக்குத் தாத்தாவாக நடித்திருக்கிறார் என்பதையும் சேர்த்துக் கணக்கிடும் போது, மிகவும் சர்ச்சைக்குரியதாகவும், சங்கடமானதாகவும் பார்க்கப்படுகிறது.சமீபத்தில், ‘படி பந்துலு’ மற்றும் ‘வேட்டகாடு’ படங்களின் வீடியோ கிளிப்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. இந்த வயது இடைவெளி குறித்த தங்கள் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் பல பயனர்கள் வெளிப்படுத்தினர். “இந்த அளவிலான ‘அருவருப்பு’ இனி எந்தத் துறையிலும் காணப்படாது என்று நம்புகிறேன்… ஸ்ரீதேவி தனது குடும்பத்தைக் காப்பாற்ற எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்,” என ஒரு பயனர் வேதனை தெரிவித்தார்.சில பயனர்கள், என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கையில் இதுவே அதிகபட்ச வயது இடைவெளி அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினர். என்.டி.ஆரின் திரைப்பயணத்தில் இது மிகப்பெரிய வயது இடைவெளி அல்ல. 1992 ஆம் ஆண்டு வெளியான ‘சாம்ராட் அசோகா’ படத்தில் 69 வயதில் வாணி விஸ்வநாத் (அப்போது 21) உடன் நடித்தார். இது 48 வருட வயது இடைவெளி – இது இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக இருக்கலாம்,” என்று ஒரு கருத்து பகிரப்பட்டது.என்.டி.ஆர். தெலுங்கு சினிமா வரலாற்றின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 3 தசாப்தங்களாகத் திரையுலகை ஆட்சி செய்த பிறகு, அரசியலில் நுழைந்து ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக 3 முறை பதவி வகித்தார். அவர் 1996 ஆம் ஆண்டு 72 வயதில் காலமானார்.ஸ்ரீதேவி தனது தென்னிந்திய வெற்றியுடன் 80களில் பாலிவுட்டில் நுழைந்து, 90களின் பெரும்பகுதிக்கு இந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாகத் திகழ்ந்தார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2009 இல் மீண்டும் படங்களில் நடித்த அவர், 2018 ஆம் ஆண்டு தனது 54 வயதில் காலமானார்.