பொழுதுபோக்கு
கை தட்ட ரெடியா இருக்கோம்; எப்போ கட் சொல்லுவீங்க? ரஜினியின் சிங்கிள் ஷாட் பார்த்து வியந்த சசிகுமார்!
கை தட்ட ரெடியா இருக்கோம்; எப்போ கட் சொல்லுவீங்க? ரஜினியின் சிங்கிள் ஷாட் பார்த்து வியந்த சசிகுமார்!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ரஜினிகாந்தை ஒரு கமர்ஷியல் சினிமா வட்டத்திற்குள் சுருக்கி விட்டனர். இந்தப் பாதையை ரஜினிகாந்தே விரும்பி தேர்ந்தெடுத்திருந்தாலும் ரஜினிக்குள் மறைந்திருக்கும் ஒரு அற்புதமான நடிகரை அதிகமாக திரையில் பார்க்க முடிவதில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.எனினும், கமர்ஷியல் படங்களானலும் தனக்கான முத்திரையை பதிக்க ரஜினிகாந்த் ஒரு போதும் தவறியதில்லை. அவருடன் நடிக்கும் சக நடிகர்கள் தொடங்கி, படத்தின் இயக்குநர்கள் வரை இதனை பல்வேறு சூழல்களில் பதிவு செய்தனர்.சினிமா ஊடவியலாளர் சித்ரா லக்ஷ்மணனுடனான நேர்காணல் ஒன்றில் நடிகர் சசிகுமார் பங்கேற்றார். அப்போது, பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.அதன்படி, “பேட்ட திரைப்படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் ரஜினிகாந்த ஆடிக் கொண்டே சென்று துப்பாக்கியால் சுடும் வகையில் அந்தக் காட்சியை படமாக்கினோம். இந்தக் காட்சியை சிங்கிள் டேக்கில் படமாக்கினர்.இதனை நேரில் பார்த்த எங்களுக்கு, திரையரங்கில் பார்த்ததை போன்று ஒரு பிரம்மாண்டம் தெரிந்தது. எப்போது இயக்குநர் கட் சொல்லுவார், நாங்கள் கைத்தட்டலாம் என்று காத்திருந்தோம். அவ்வளவு பிரமாதமாக அந்தக் காட்சியில் ரஜினிகாந்த் நடித்தார்.இயக்குநர் கட் சொன்னதும் மொத்த யூனிட்டும் ரஜினிகாந்த் நடிப்பிற்காக கைத்தட்டினோம்” என்று சசிகுமார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சரியான வாய்ப்பு கிடைத்தால் ‘முள்ளும் மலரும்’, ‘கை கொடுக்கும் கை’, ‘தில்லு முல்லு’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்களில் நாம் பார்த்த ரஜினிகாந்தின் நடிப்பை மீண்டும் காண முடியும் என்று புரிந்து கொள்ளலாம்.