இலங்கை

அநுரவுக்கு வழங்கிய ஆணையை கொள்ளையடிக்கும் ரில்வின், பிமல்; சாடுகின்றார் சம்பிக்க ரணவக்க!

Published

on

அநுரவுக்கு வழங்கிய ஆணையை கொள்ளையடிக்கும் ரில்வின், பிமல்; சாடுகின்றார் சம்பிக்க ரணவக்க!

கோத்தாபய ராஜபக்சவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பஸில் ராஜபக்ச கொள்ளையடித்ததைப்போன்று, அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை ரில்வின் சில்வா, பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளனர் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
அரசியல் கட்டமைப்பின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த வெறுப்பை சாதகமாகப் பயன்படுத்தி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் கொள்ளையடித்துள்ளனர். இதன் பலனை அரசாங்கம் வெகுவிரைவில் விளங்கிக்கொள்ளும். தேசிய மற்றும் சர்வதேச அரச முறை கடன்களைச் செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் எவ்விதமான புதிய திட்டங்களும் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்பெற்று நாள்களைக் கடத்துவதை மாத்திரம் அரசங்கம் பிரதான பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளது என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version